போலி செய்திகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சவுதி அரேபியாவில் மோடியின் புகைப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி இஸ்லாமியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில் அது போலி என கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் அந்த போராட்டத்தில் ரஷ்ய அதிபர் புடினின் புகைப்படம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் மோடியின் புகைப்படம் சித்தரித்து வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதன்மூலம் சவுதி அரேபியாவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும். போலி செய்திகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்