குழந்தைகளுக்கு வழங்கும் சத்துமாவில் வண்டு?

விருதுநகர் மாவட்டத்தில் 1,502 அங்கன்வாடி மையங்கள் மூலம், கர்ப்பிணிகள் மற்றும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இணை உணவாக, மாதந்தோறும் 215 மெட்ரிக் டன் சத்துமாவு வழங்கப்படுகிறது. இந்த சத்துமாவு, ராஜபாளையம் அருகே, தளவாய்புரத்தில் உள்ள மகளிர் மேம்பாட்டு தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் தயாரிக்கப்படுகிறது. சத்துமாவில் கோதுமை மாவு, வெல்லத்தூள், சோயா மாவு, வறுத்த கேழ்வரகு மாவு, முளை கட்டிய கேழ்வரகு மாவு, தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் சேர்க்கப்படுகின்றன. இந்நிலையில், விருதுநகரில் உள்ள அங்கன்வாடி மையங்களில், விநியோகம் செய்யப்படும் சத்துமாவில் புழுக்கள், வண்டுகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால், கர்ப்பிணிகளும், குழந்தைகளும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், ராஜபாளையம் அருகே, தளவாய்புரத்தில் சத்துமாவு தயாரிக்கப்படும் கூட்டுறவு நிறுவனத்தில் சமூகநலம், சத்துணவு திட்ட அரசு செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் மதுமதி தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, சத்துமாவில் சேர்க்கப்படும் பொருட்கள், அவற்றின் தரம், அவை தூய்மைப்படுத்தப்படும் முறை ஆகியவை குறித்து கூட்டுறவு சங்க செயல் அலுவலர் புவனேஸ்வரனிடம் கேட்டறிந்தனர். ஆய்வின்போது, கலெக்டர் சிவஞானம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்