பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியன் குத்துவிளக்கேற்றியும், பயணிகளுக்கு விமான டிக்கெட்டை வழங்கியும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 5 மணி 25 நிமிட அளவில் பெங்களூருவிலிருந்து புறப்படும் விமானமானது, 6 மணி 50 நிமிட அளவில் தூத்துக்குடி வந்தடையும். பின்னர் மீண்டும் தூத்துக்குடியிலிருந்து 7 மணி 30 நிமிடங்களுக்கு புறப்படும் விமானம் 9 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியன், தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தும் பணிகள் மூன்று மாதங்களில் முடிவடையும் என தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)