மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ., - சிவசேனா ஆட்சி

மும்பை : மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளதுமொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தலில் 178 க்கும் அதிகமான இடுங்களில் பா.ஜ., கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இதில் பா.ஜ., மட்டும் 100 இடங்களுக்கும் மேல் முன்னிலையில் உள்ளது. சிவசேனா 40 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை 145 என்ற நிலையில், பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி முன்னிலையில் உள்ளது. தேசியவாத காங்., 30 இடங்களிலும், காங்கிரஸ் 25 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தாலும், கூட்டணி கட்சியான சிவசேனாவிற்கு இம்முறை ஆட்சியை விட்டுக் கொடுக்கும் என்றே கூறப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு இரு கட்சிகளும் கூடி, யாருக்கு முதல்வர் பதவி என்பதை ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்றே கூறப்படுகிறது.