வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக, அவற்றோடு ஆதார் எண்ணை இணைக்கும் அதிகாரம் வேண்டும்

புதுடில்லி: 'வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக, அவற்றோடு ஆதார் எண்ணை இணைக்கும் அதிகாரம் வேண்டும்' என்ற, தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, சட்ட திருத்தம் கொண்டு வர, சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் ஆணையம், சமீபத்தில் எழுதியிருந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது: வாக்காளர் பட்டியலில் சேர, புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களின் விபரங்களை சரி பார்க்கவும், வாக்காளர் பட்டியலில் இருந்து, போலி வாக்காளர்களை நீக்கவும், ஆதார் எண் விபரங்கள் தேவைப்படுகின்றன. உச்ச நீதிமன்றம், 2015 ல் பிறப்பித்த உத்தரவு, அதற்கு தடையாக இருக்கிறது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு, தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், திருத்தம் கொண்டு வர சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்