லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. துடியலூர் அடுத்த சேரன் நகரில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட தரகர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆர்.சி. புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், தரகர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் ஊழியர்களின் அறைகள், உடைமைகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடமும் சோதனையும், விசாரணையும் மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதால், அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)