பட்டியலில் இடம்பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும்

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், பட்டியலில் இடம்பெறாதவர்கள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளர் படியலில் முதலில் பெயரை சேர்க்க வேண்டும் என்றும், www.nsvp.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர்கள் மண்டல அலுவலகங்களிலும், மற்ற மாவட்டங்களில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் படிவங்களை கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அடுத்த மாதம் 18ந் தேதி வரை காலஅவகாசம் இருப்பதாக தெரிவித்துள்ள மாநிலத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட பின்னர்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது. பட்டியலில் இடம்பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்