250 தனியார் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும். இல்லை என்றால் அப்பள்ளிகள் செயல்பட முடியாத நிலை ஏற்படும்

சென்னை: அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 250 தனியார் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும். இல்லை என்றால் அப்பள்ளிகள் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளது. தொடர் அங்கீகாரம், 3ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் அங்கீகாரம் என்று அந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், பல பள்ளிகள் எந்த அங்கீகாரமும் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளன. இதையடுத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் எடுத்த நடவடிக்கையின் பேரில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 2 ஆயிரம் பள்ளிகளில் 1750 மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து உரிய அங்கீகாரம் பெற்றுள்ளன. இருப்பினும் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்காமலேயே 250 பள்ளிகள் இயங்கி வருகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளன. அந்த பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை அங்கீகாரம் பெற்றுள்ள 1750 பள்ளிகளுக்கும் 2020 மே 31 வரை தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தொடர் அங்கீகாரம் நீட்டிப்பு கேட்டு பிறகு விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் பள்ளிகள் விண்ணப்பிக்காமல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் அந்த பள்ளிகள் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்