தீபாவளியன்று நிகழ்ந்த துயரம் எடப்பாடி பழனிசாமி மாமனார் காலமானார்...

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் கவுண்டர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77. சங்ககிரி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனை வரும் வழியிலேயே காளியண்ணன் உயிரிழந்துள்ளவிட்டதாக தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவின் தந்தை காளியண்ணன் கவுண்டர் சங்ககிரி அருகே உள்ள தேவூர் அம்மாபாளையத்தில் வசித்து வந்தார். சேலத்திற்கோ, சென்னைக்கோ பிள்ளைகள் வீட்டிற்கு செல்லாமல் கிராமத்தில் விவசாயத்தை கவனித்துக்கொண்டு வாழ்ந்து வந்தவர் அவர். காளியண்ணன் கவுண்டருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தமகள் பெயர் ராதா. இவர் தான் எடப்பாடி பழனிசாமியின் மனைவி. இரண்டாவது மகள் பெயர் சுசிலா, மூன்றாவது பிள்ளை வெங்கடேசன். மருமகன் முதலமைச்சராக இருந்தாலும் கூட அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எளிமையான முறையில் அனைவரிடத்திலும் அன்புடன் பழகக் கூடியவர்தீபாவளியன்று தேவூர் அம்மாபாளையத்தில் உள்ள இல்லத்தில் இருந்த காளியண்ணன் கவுண்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் அருகிலுள்ள ஊரான குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே காளியண்ணன் கவுண்டர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். காளியண்ணன் கவுண்டருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தீபாவளி என்பதால் அன்று விடுமுறையில் இருந்துள்ளார். இதையடுத்து தாமதிக்க வேண்டாம் எனக் கருதி அவரின் உறவினர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனை அழைத்துச்சென்றுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனாரை குஞ்சுபையக் கவுண்டர் என்று அழைத்தால் தான் சங்ககிரி பகுதியில் அனைவருக்கும் தெரிகிறது. ஏனென்றால் அந்தப் பெயரில் தான் அழைக்கப்பட்டு வந்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு