சத்ரபதி சிவாஜியின் வாரிசு!இடைத்தேர்தலில் தோல்வியை தழுவி

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல்கலுடன் நாடுமுழுவதும் பல மாநிலங்களில் காலியாக இருந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்கள் கடந்த அக் 21 அன்று நடைபெற்றது. இதோடு சேர்த்து இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அந்த இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா தொகுதியின் ஒன்றாகும். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் உதயன்ராஜே போஸலே என்பவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்திருந்ததால் சதாரா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகியிருந்தார் உதயன்ராஜே போஸலே. இவர் புகழ்பெற்ற மராத்தா மன்னரான சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலாவார். சதாரா தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இவர் அத்தொகுதியில் செல்வாக்குமிக்கவராக வலம்வருபவர். இதனிடையே சதாரா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இவருக்கு பாஜக வாய்ப்பளித்தது. இவரை எதிர்த்து சரத் பவாரின் நண்பரான ஸ்ரீநிவாஸ் பாட்டீலை களமிறக்கியது தேசியவாத காங்கிரஸ் கட்சி. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் சதாரா தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீநிவாஸ் பாட்டீல் 6.36 லட்சம் வாக்குகள் பெற்று உதயன்ராஜே போஸலேயை தோற்கடித்தார். போஸலே 5.48 லட்சம் வாக்குகளையே பெற்றிருந்தார். 10,000 வாக்குகளை நோட்டா பெற்றிருந்தது. சதாரா தொகுதி தேர்தலுக்காக போஸலேவை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதே நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தேர்தல் பிரச்சாரத்தின் போது நல்ல மழை பெய்தது. 78 வயதான பவார் மழையில் நனைந்தவாறே மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அவருக்கு நல்ல பலனை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது