இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என சத்யபிரதா சாஹூ தகவல்....!

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஊழல் வாதிகளும் உதவாகாரைகளும் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக விமர்சித்தார். தமிழகத்தின் சுயமரியாதை பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், ஆனால் இந்த அரசு எதை பற்றியும் கவலைபடவில்லை என்றும் ஸ்டாலின் விமர்சித்தார். தமிழகத்தின் சுயமரியாதை பறிக்கப்படுவதாகவும், உரிமை மறுக்கபடுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு ஆதரவு கேட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்கள் அவர் கேட்டுக்கொண்டார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரசுக்கு இனிமேல் தமிழகத்தில் இடமில்லை என்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பாவி என்றும், திமுகவினர் பாவிகள் என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து கே.எஸ். அழகிரி இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டவர். அப்போது ஜெயலலிதாவின் ஆவி ஸ்டாலினை சும்மாவிடாது என்ற முதலமைச்சர் பழனிசாமியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் தாங்கள் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு