குன்னூர் - மவுண்ட்ரோடு பகுதியிலும், ஸ்ரீபத்தட்டி பகுதியிலும் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து கார்கள் சேதமடைந்தன

ஊட்டி: நீலகிரியில் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. குன்னூர் - மவுண்ட்ரோடு பகுதியிலும், ஸ்ரீபத்தட்டி பகுதியிலும் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து கார்கள் சேதமடைந்தன குன்னூர் - மேட்டுப்பாளையம் ரோட்டில் 4 இடங்களில் மரம் விழுந்தது. இதனை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால், கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள், கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன