லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை முழுமையாக மீட்பதில் சிரமம் இருப்பதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகரில் உள்ள நகைக்கடைகள், அடகு கடைகள் மற்றும் வங்கிகளின் பாதுகாப்பு குறித்த விளக்கக் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்பட சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் அமல்ராஜ், திருச்சி நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருவாரூர் முருகன் 23 வருடமாக திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவன் கொள்ளையடித்த நகைகளை முழுமையாக மீட்பதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார். வங்கிகள், நகைக்கடைகளில் கட்டாயம் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும், காப்பீடும் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு