"அவ்வளவு தான் பராமரிப்பு." மீண்டும் பராமரிப்பற்ற நிலையில் மாமல்லபுரம்.

பிரதமர் மோடி - சீன அதிபர் வருகைக்குப் பின் மாமல்லபுரம் சிற்பங்களை மின்னொளியில் கண்டுகளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்புக்குப் பின்னர், மாமல்லபுரம் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. புதுப்பொலிவுடன் காட்சியளித்த வெண்ணெய் திரட்டி பாறை, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், மற்றும் கடற்கரை கோயில் போன்றவற்றை நேரில் கண்டு ரசித்தனர். தொடர்ந்து மின்னொளியில் சிற்பங்களை காண காத்திருந்த நிலையில், மாலையில் அலங்கார மின்விளக்குகள் எரியவில்லை என்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பிரதமர் - சீன அதிபர் வருகையின் போது எவ்வாறு காட்சியளித்ததோ, அதேபோன்று பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)