பாலியல் தொந்தரவு கொடுத்து கராத்தே பயிற்சியாளர் கைது

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, 11ம் வகுப்பு படித்து வரும், மாணவி கராத்தே பயிற்சி பெற்று வந்தார். 'கராத்தே பயிற்சியாளர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்,' என, கடந்த ஏப்ரலில் தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.மாணவியின் தாய் பள்ளி நிர்வாகம், அங்குள்ள 'சர்ச்' நிர்வாகத்திடம், புகார் தெரிவித்துள்ளார். மகளின் எதிர்காலம் பாதிக்கும் என மாணவியின் தந்தை, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.கடந்த, 27ல் இரவு, கணவர் மற்றும் அவரின் இரண்டு சகோதரர்களிடம், மாணவியின் தாய், தகராறு செய்துள்ளார். அப்போது, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.மாணவியின் தந்தைக்கு ஆதர வாக, நான்கு பேர் அங்கு வந்து பேசியுள்ளனர். அப்போது, குடும்பத்தார் தாக்கியதில்,மாணவியின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர், கூடலுார் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மாணவியின் தாய் புகாரின் பேரில் கூடலூர் போலீசார் மாணவியின் தந்தை, சித்தப்பாக்கள் இருவர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வந்த நான்கு பேர் என மொத்தம் ஏழு பேரை நேற்று மாலை கைது செய்தனர்.கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், மாணவி அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரவீனா வழக்கு பதிவு செய்து, கராத்தே பயிற்சியாளர் சாபு ஆப்ரஹாம் என்பவரை நேற்றிரவு கைது செய்தார்.இன்ஸ்பெக்டர் பிரவீனா கூறுகையில்,''விசாரணை மேற்கொண்டதில், மாணவியை பாலியல் சில்மிஷம் (பாலியல் கொடுமை) செய்தது உறுதியாகி உள்ளது. கராத்தே மாஸ்டர் சாபு ஆப்ரஹாம் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்