தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் தீவிரவாத தொடர்பு.. தொடரும் சோதனை.

கோவை: தமிழகத்தில் கோவை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் நாகூரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கோவையில் லாரிப்பேட்டையில் சவுரிதீன் என்பவர் வீட்டிலும், ஜி.எம்.நகரில் நிஷார் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் 5 பேர் சோதனை நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் மியாந்த் தெருவில் உள்ள முகமது அஜ்மல் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதை தொடர்ந்து அவரை கைதி செய்தனர். சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த நூர் முகமது என்பவரது மகன் சிராஜூதீன்(20). இவர் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொலைபேசி மூலம் பேசியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் என்.ஐ.ஏ., சோதனை: ஒருவர் கைது இலங்கையில் ஈஸ்டர் நாளன்று நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர்கள், இலங்கை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனப் பலரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தற்போது கோவையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவை லாரிப்பேட்டை பகுதியில் செளருதீன் என்பவரது வீட்டிலும், ஜி.எம்.நகரில் உள்ள சமீர் என்பவரது வீட்டிலும் காலை 6மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொள்கின்றனர்.கணினிகள் மற்றும் செல்போன்களில் உள்ள விவரங்கள் சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை குண்டுவெடிப்பு வழக்கு மட்டும் அல்லாமல், இந்து அமைப்பின் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியது தொடர்பாகவும் சோதனை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. கோவை மாநகர காவல்துறையினர் பாதுகாப்போடு சோதனை நடைபெறுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்