விஜய் ரசிகர்கள் நெல்லை காவல்துறையிடம், சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான சிசிடிவி கேமராக்களை வழங்கினர்.

பிகில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் நெல்லை காவல்துறையிடம், சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான சிசிடிவி கேமராக்களை வழங்கினர். தீபாவளியையொட்டி அட்லீ இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அனைத்து ரசிகர்களும் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி உள்ள நிலையில் நெல்லை விஜய் ரசிகர்கள் செய்திருப்பது பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அவர்கள் படத்திற்கு கட்அவுட்டுகள் வைத்து கொண்டாடுவதை தவிர்த்து, நெல்லை மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட, நான்கு இடங்களில் சிசிடிவி அமைக்க, சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, சிசிடிவி மேகராக்களை காவல்துறையினரிடம் வழங்கினர். வழக்கமாக திரைப்படத்தின் வெளியீட்டன்று சிறப்பாக கொண்டாடி வரும் ரசிகர்கள் காவல் துறையினருக்கு சிசிடிவியை வழங்கியுள்ளது அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு