செல்போன் வீடியோ மூலம் அவதூறு பரப்பியதாக நகராட்சி திட்ட அலுவலராகப் பணிபுரிந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி திட்ட அலுவலராகப் பணிபுரிந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் மீது செல்போன் வீடியோ மூலம் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அறிவுடைநம்பி என்ற அந்த அலுவலர் கடந்த 30 ஆம் தேதி நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்ட ஒரு கட்டிடத்தை தன்னிச்சையாக கையூட்டுப் பெற்றுக்கொண்டு திறந்து விட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர், மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா மற்றும் நகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் மீது ஊழல் புகார் சுமத்தி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் தம் மீது நடவடிக்கை எடுத்தால் பிரதமர், முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் தலையிடுவார்கள் என்று கூறி அதிர வைத்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் குறித்து அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அறிவுடைநம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்