உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த அமேசான் நிறுவன தலைவர்!

அமேசான் நிறுவன பங்குகளின் மதிப்பு குறைந்ததையடுத்து, அந்நிறுவன தலைவர் ஜெஃப் பெசாஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார். கடந்த ஆண்டு, 160 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களுடன் அமேசான் நிறுவனத்தின் தலைவர், ஜெஃப் பெசாஸ், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இந்நிலையில் நேற்று, அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 7 சதவீதம் குறைந்தது. எனவே ஜெஃப் பெசாஸின் சொத்து மதிப்பும் 103.9 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்ததுள்ளது. News7 Tamil இதனால் ஜெஃப் பெசாஸுக்கு முன்பு 24 ஆண்டுகளாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட்டின் நிறுவனர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தற்போது அந்த இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 105.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)