மழைநீர் சேகரிப்பாக மாற்ற அதிரடி உத்தரவு

சென்னை: மணப்பாறை அருகே குழந்தை சுஜித், பயனற்ற ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வினால், தமிழகத்தில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகளில் 24 மணி நேரத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்தார். சுமார் 80 மணி நேர போரோட்டம் தோல்வியில் முடிந்தது. இறுதியாக சுஜித்தின் சடலம் மீட்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இந்த சோக சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட குடிநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வாரிய பொறியாளர்களுக்கு அதன் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் பிறப்பித்துள்ள அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: குடிநீர் வாரிய பொறியாளர்கள், 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைக்க மாற்ற வேண்டும். கட்டமைப்பாக மாற்ற தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் இந்த நடவடிக்கைக்கு உதவலாம். மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றிய சந்தேகம் இருந்தால் 9445802145 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், https://www.twadboard.tn.gov.in/ என்ற இணையதளத்திலோ, சமூக வலைதளங்களிலோ விளக்கங்கள் பெறலாம். இவ்வாறு இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்