விரைவில் பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளியில் 1 முதல் 8 வரையுள்ள ஆசிரியர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சக்திமசாலா நிறுவனத்தின் சார்பு நிறுவனமான சக்திதேவி அறக்கட்டளையின் சார்பில் ஈரோடு மாவட்டத்திலுள்ள 41 அரசுப் பள்ளிகளுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நூலகங்கள் தொடங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இம்மாத இறுதிக்குள் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் கணினிமயமாக்கப்பட்டு இணையதள வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.