அரசு மருத்துவர்கள் பலர் பணியிடமாற்றம் - தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு, பிரேக் இன் சர்வீஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மருத்துவ கல்லூரி டீன் மூலம், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், டாக்டர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.இதன் இடையே, பணிக்கு திரும்பும் டாக்டர்களை தடுக்கும் டாக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் நடவடிக்கை துவங்கியது எனவும் பணிக்கு திரும்பும் டாக்டர்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.