சுர்ஜித்துக்காக நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனை!

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கித்தவிக்கும் குழந்தை சுஜித் பாதுகாப்பாக மீட்கப்பட நாகூர் தர்காவில் இஸ்லாமயர்கள் சிறப்பு பிரார்தனையில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் என்ற குழந்தையை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டி, உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், சாஹிபுமார்கள் பெரியாண்டவர் சன்னதியில் துவா செய்தனர். இதே போல பல்வேறு பகுதிகளில் குழந்தை சுஜித்துக்காக பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.