வேலூர் விஜிலென்ஸ்! - சிக்கிய காட்பாடி சார்பதிவாளர்

வேலூரை அடுத்த காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு மகன் சசிக்குமார் (36). பெங்களூருவில் சரக்கு போக்குவரத்து தொடர்பான வணிக தொழில் செய்கிறார். இவரது தந்தை ஸ்ரீராமுலு 2010-ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். தந்தை பெயரில் காட்பாடியில் உள்ள வீடு, மனை, விவசாய நிலம், இரண்டு கடைகள் ஆகிய 5 விதமான பூர்விக சொத்துகளைச் சரி சமமாக பாகப் பிரிவினை செய்துகொள்ள அண்ணன் விஜயகுமாருடன் சேர்ந்து சசிக்குமார் முடிவுசெய்தார். இதற்காக சொத்துக்களின் மூல பத்திரங்களை எடுத்துக் கொண்டு காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றார் சார்பதிவாளர் தேவராஜ்( 54 )'தனக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்று கூறினார்லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிக்குமார், இதுபற்றி வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இன்று மதியம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சசிக்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். போலீஸார் சாதாரண உடையில் பின்தொடர்ந்து சென்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்