ஏர் இந்தியா நிறுவனத்தில் 200 விமானிகள் ராஜினாமா

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் கடந்த 3 மாதத்தில் சுமார் 200 விமானிகள் ராஜினாமா செய்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பளம், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் விமானிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள ராஜினாமா செய்துள்ள விமானி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், தங்கள் கோரிக்கைகளை பலமுறை அரசிடம் தெரிவித்தும் தீர்வு கிடைக்காததால் தாங்கள் இந்த முடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா தரப்பில் கூறுகையில், விமானிகள் ராஜினாமா செய்தாலும் தங்களிடம் எவ்வித தடைகளும் இன்றி விமானங்களை இயக்க தேவையான விமானிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது இந்த புதிய பிரச்னைக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)