சசிகலா குறித்த கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்தார்.

அ.தி.மு.கவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும்தான் தலைவர்கள் என்றும் வேறு யாருக்கும் இடமில்லை என்றும் சசிகலா குறித்த கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கையில் இதனைத் தெரிவித்தார். தீபாவளிக்கு டாஸ்மாக்கில் விற்பனை இலக்கு நிர்ணயித்திருப்பதாக வரும் தகவல்களில் உண்மையில்லை என்றும் படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.