புதுச்சேரி பைனான்சியர் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது...!

புதுச்சேரியில் பைனான்சியர் கொலை வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த பாலாஜி என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த 16ம் தேதி இருசக்கரவாகனத்தில் சென்றபோது ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் ஆனந்த் பாலாஜியிடம் வேலை பார்த்த சிவசங்கர், விக்னேஷ் ஆகிய இருவரும் அவரை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கொலைக்கு உதவியாக இருந்த மேலும் 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், தங்களது நண்பர்கள் மூன்று பேரை கொலை செய்ய ஆனந்த் பாலாஜி தொடர்ந்து வற்புறுத்தியதால், அவரையே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு