பிரதமர் மோடியின் நிழலாக நின்ற அதிகாரி யார்?

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையில் மொழி பெயர்ப்பாளராக இருப்பவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார். அவர், பற்றிய சுவாரஸ்யமான சம்பவங்கள் வெளிவந்துள்ளன.சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் சிற்பங்களை இன்று சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பார்வையிட்டனர். இந்தச் சந்திப்பின்போது மோடி மற்றும் சீன அதிபருடன் கூடுதலாக இரண்டு பேர் மட்டுமே உடனிருந்தனர்.மது சுதன்அதில் ஒருவர் சீனர். இன்னொருவர் இந்தியர். மது சுதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி. அவர், இரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.மாமல்லபுர சிற்பங்களின் வரலாற்று சிறப்புகளை, ஷி ஜின்பிங்குக்கு மோடி எடுத்துரைத்தார். அதனை, ஜின்பிங்குக்கு மதுசுதன் மொழி பெயர்வு செய்தார். சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த மது சுதன், 2007-ம் ஆண்டு பேட்ச் ஐ.எஃப்.எஸ்(IFS)அதிகாரி ஆவர்.அவருடைய முதல் பணியே 2009 முதல் 2011-ம் ஆண்டு சீனாவில் இந்திய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளராக பணி செய்தார். பின்னர், இரண்டு வருடங்கள் சான் பிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றினார். பின்னர், 2013-ம் ஆண்டு மீண்டும் சீனாவுக்கு மாற்றப்பட்டார். .தற்போது, சீனாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலராக இருக்கும் மது சுதனுக்கு, சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் உள்பட பல மொழிகள் நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்