சுஜித் மீட்புப் பணி குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து!

தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம் என குழந்தை சுஜித் மீட்புப் பணி குறித்து கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். திருச்சி, மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி, தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுஜித் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, அரசு எந்திரத்தையோ, ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை, என்றும் குழந்தை மீட்பே குறிக்கோள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாறை என்பது நல்வாய்ப்பு, மண்சரியாது என பதிவிட்டுள்ள வைரமுத்து தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்