மெட்ரோ ரயில் டிக்கெட், மெட்ரோ கார்டு ரீசார்ஜ் சேவை

மெட்ரோ ரயில் டிக்கெட் பெற பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, நிர்வாகம் நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் டிக்கெட், மெட்ரோ கார்டு ரீசார்ஜ் சேவைக்காக காலை நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனை தவிர்த்து பயணிகளுக்கு சுமூகமான மெட்ரோ சேவை வழங்க நிர்வாகம், டைட்டன் வாட்ச் நிறுவனத்துடன் இணைந்து நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி, சுய விவரங்களுடன் கூடிய 'சிப்' பொருத்தப்பட்ட இந்த கைக்கடிகாரத்தை பயணிகள் அணிந்து கொண்டு மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் தடையின்றி செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப 1000 முதல் 1,500 ரூபாய் வரை பல்வேறு மாடல்களில் இந்த கைக்கடிகாரங்கள் கிடைக்கும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. செல்போன் எண்களை போல் இதற்கு ஒரு எண் கொடுக்கப்படும் எனவும், அதனை ரீசார்ஜ் செய்து பயணிகள் பயணிக்க முடியும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு