பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
காவிரி கோதாவரி இணைப்புக்காக, விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்த பிரதமர் மோடியிடம், தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 9 ஆயிரத்து 927 கோடி ரூபாய் மதிப்பிலான நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு, மத்திய அரசு நிதியுதவி வழங்கிட வேண்டுமென்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. அதே போன்று, 1 மற்றும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, 50 க்கு 50 என்ற சதவீதத்தில் மத்திய அரசின் நிதியுதவி, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.