அரசியல் விளம்பரங்களை தடை செய்ய டுவிட்டர் நிறுவனம் அதிரடி முடிவு

சர்வதேச அளவில், தங்கள் பக்கத்தில் அரசியல் விளம்பரங்களை தடை செய்ய உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் மிக முக்கியமான சமூக வலைத்தளங்களாக உள்ளது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் இந்த வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். இதற்கிடையே, இணையத்தில் செய்யப்படும் விளம்பரங்கள் அதிக சக்தி கொண்டதாகவும், வணிக விளம்பரதாரர்களுக்கு அதிக பலனளிக்கும் விதமாகவும் இருக்கிறது. அதே சக்தி அரசியலுக்கு வரும்போது, சில ஆபத்துகளையும் கொண்டு வருகிறது. அது வாக்காளர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏ்றபடுத்துகிறது. அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இணையத்தில் செய்யப்படும் அரசியல் விளம்பரங்களில் சில நேரங்களில் போலி செய்திகள் பரவும் அபாயமும் இருக்கிறது. இணையத்தில் அரசியல் விளம்பரங்கள் செய்யப்படுவது சவால்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் அரசியல் விளம்பரங்கள் பதிவிடுவதற்கு உலக அளவில் தடை விதிக்கப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து டுவிட்டர் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி கூறுகையில், சர்வதேச அளவில், டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். அரசியல் கருத்துகள் மக்களை சென்றடைவது என்பது குறிப்பிட்ட கட்சிகளின் இலக்காக இருக்க வேண்டும். அதை பணம் கொடுத்து வாங்கக்கூடாது. ஏன் சில காரணங்கள்...எனக்கூறி சில விளக்கங்களை அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: ஒரு அரசியல் செய்தியானது, மக்கள் குறிப்பிட்ட அந்தக்கணக்கை பின் தொடரும் போது, அல்லது ரீ டுவிட் செய்யும் போது அதிக கவனம் பெறுகிறது. இதில் மக்களின் கைகளில் தான் முடிவு இருக்கிறது. ஆனால், பணம் மூலம் கவனம் பெறுவது என்பது அதை தகர்க்கிறது. மேலும் மக்களிடம் ஒரு கருத்தை அது திணிக்கிறது. இது பணம் மூலம் நடைபெறக்கூடாது என நாங்கள் நம்புகிறோம். இயந்திர கற்றல் அடிப்படையிலான செய்திகளை பதிவு செய்தல் மற்றும் மைக்ரோ-இலக்கு நிர்ணயம், சரி பார்க்கப்படாத தவறான தகவல்கள் மற்றும் முற்றிலும் போலியான தகவல்கள் ஆகியவற்றினால் வரும் சிக்கல்களைத் தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கையின் விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும், அரசியல் விவகாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் பதிவிடும் அரசியல் விளம்பரங்கள் தடை செய்யப்படும். முதலில் வேட்பாளர்களின் விளம்பரத்தை மட்டுமே தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் விளம்பரங்கள் காரணமாகவும் பிரச்சினைகள் எழக்கூடும் என்பதால் அவற்றையும் தடை செய்ய உள்ளோம். இவ்வாறு கூறினார். அரசியல்வாதிகளின் தவறான தகவல்களுடன் கூடிய விளம்பரங்களை கண்காணித்து சரிபார்க்க வேண்டிய நெருக்கடியில் பேஸ்புக் உள்ள நிலையில், டுவிட்டர் நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)