சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அமைந்துள்ள மெட்ரோ நிலையங்களில் பெரும்பாலான நிலையங்கள் வாகன நிறுத்தங்களுடன் அமைந்துள்ளது. வாகன நிறுத்துமிடங்களில் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதையடுத்து கடந்த சில மாதங்களுக்குப் பின்பு வாகன நிறுத்துமிட கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் குடியிருப்போர் தங்கள் வாகனங்களை நிலையங்களில் மாதாந்திர பாஸ் வாங்கி நிறுத்தி வருகின்றனர். இதனால் பயணிகளுக்கு இடமில்லாத நிலை காணப்படுகின்றது. இதனையடுத்து படிப்படியாக அனைத்து நிலையங்களிலும் மாதாந்திர பாஸ்களை நிறுத்தி ஒழுங்குபடுத்த மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக எழும்பூர், திருமங்கலம், அண்ணா நகர் கிழக்கு, திருமங்கலம், ஷெனாய் நகர் மெட்ரோ இரயில் நிலையங்களில் நாளை முதல் மாதாந்திர வாகன நிறுத்த பாஸ் நிறுத்தப்படுகிறது.மெட்ரோ இரயில்களில் செல்வதற்கு மாதாந்திர அட்டை வைத்திருப்போருக்கு மட்டும் மாதாந்திர வாகன சீட்டு வழங்கப்படும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்