மாற்றத்தை உண்டாக்க மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மாற்றத்தை உண்டாக்க மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்களிடையே, கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராவது ஒருவகை விளையாட்டு என தெரிவித்தார். மாணவர்கள் ஏன் அரசியலில் ஈடுபடவில்லை என கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், மாற்றத்தை உண்டாக்க மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். தூய்மை இந்தியா என்ற பெயரில், குப்பைகளும், சாக்கடைகளும் உள்ள இடங்களுக்குத் தானே பிரதமர் நரேந்திர மோடி வரச் சொல்கிறார் என குறிப்பிட்ட கமல்ஹாசன், அதேபோல், அரசியலைத் தூய்மைப் படுத்த மாணவர்கள் அசுத்தமான அரசியலில் குதிக்கத்தான் வேண்டும் என கூறினார். சுத்தம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக வாருங்கள் என அழைப்பு விடுத்த கமல்ஹாசன், தற்போது அதனை சுத்தம் செய்யா விட்டால் என்றைக்குமே சுத்தம் செய்ய முடியாது என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்