15 நாட்களுக்கு வாகன உற்பத்தியை நிறுத்தி வைக்கப் போவதாக அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாகன விற்பனையில் ஏற்பட்ட சரிவையடுத்து இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் 15 நாட்களுக்கு வாகன உற்பத்தியை நிறுத்தி வைக்கப் போவதாக அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் பல நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதில் கார் நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது .ஆனால் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வரும் நஷ்டத்தை தடுக்க அந்நிறுவனம் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு முடிவாக அக்டோபார் மாதத்தில் பல தொழிற்சாலைகளுக்கு 2 முதல் 15 நாட்கள் வரை வேலையில்லா நாட்கள் என அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை