மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வீட்டில் திருட்டு: ஊழியர் கைது

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். அவருக்கு மும்பையின் நேபியன் கடற்கரை சாலையில் வீடு உள்ளது. இங்கு, வீட்டு வேலைக்காரராக பணிபுரிந்து வந்த விஷ்ணுகுமார் விஸ்வகர்மா(28) என்பவர், திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது திருட்டு புகார் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த செப்., 16 முதல் 18 தேதிகளில் திருட்டு சம்பவம் நடந்ததாக, காம்தேவி போலீஸ் ஸ்டேசனில், விஸ்வகர்மா மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, டில்லியில் இருந்த விஸ்வகர்மாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து , திருடப்பட்ட சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அமைச்சர் பியூஷ் கோயல் வீட்டில் இருந்த அவரின் கம்ப்யூட்டரில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ரகசிய தகவல்களை விஸ்வகர்மா திருடியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அவரின், மொபைல் போனை ஆய்வு செய்த போது, சில இமெயில்களை, அடையாளம் தெரியாத நபர்களுக்கு அனுப்பியதும், சில தகவல்களை அழித்திருப்பதும் தெரியவந்தது. இதனால், விஸ்வகர்மா, அமைச்சரின் கம்ப்யூட்டரில் இருந்து முக்கிய தகவல்களை திருடியிருக்கலாம் என போலீசார் உறுதியாக நம்புகின்றனர். இதனையடுத்து விஸ்வகர்மாவின் மொபைல்போனை, சைபர் பிரிவு போலீசாரிடம் வழங்கி, ஆவணங்களை திரும்ப பெறும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். மேலும், மொபைல் அழைப்புகளை ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளனர். விஸ்வகர்மா கடந்த 3 ஆண்டுகளாக, பியூஷ் கோயல் வீட்டில் பணிபுரிந்து, அங்கிருப்பவர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இதனால், ஆரம்பத்தில் அவர் மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்