ஆசிரியை கடத்தல்?: பதறும் பெற்றோர்; நடந்தது என்ன?

ஆசிரியை காணவில்லையென அவரது பெற்றோர் பொலிசில் நிலையத்தில் முறைப்பாடொன்றை கொடுத்துள்ளனர். ஹட்டன் ஸ்ரீபாத வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியையே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஸ்ரீ பாத வித்யாலயத்தின் 6ம் வகுப்பு பொறுப்பாசிரியைான கம்பொல, கீரபானவை சேர்ந்த சந்திம நிசன்சலா ரத்னாயக்க (27) என்ற ஆசிரியை வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவிற்குள் கடத்தப்பட்டிருக்கலாம் என பெற்றோர் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பாடசாலைக்கு தினமும் சென்று வந்துள்ளார். மாலை 4.30 மணிக்கே வீட்டுக்கு வந்து சேர்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவ தினத்தில் இன்னொரு ஆசிரியையும் கம்பொலவிற்கு வந்து சேர்ந்துள்ளார். பின்னர் தனியாக வீடு நோக்கி நடந்து சென்றபோது காணாமல் போயுள்ளார். வீட்டிற்கு சற்று தொலைவிலுள்ள சிசிரிவி கமராவில் அவர் குடைபிடித்தபடி நடந்து வருவது பதிவாகியுள்ளது. எனினும், அவர் வீடு செல்லவில்லை. பொலிஸ் அதிகாரியொருவருக்கு அவரை நிச்சயதார்த்தம் செய்திருந்ததாகவும் பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முடக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)