ஆர்.பி. உதயகுமார் சவால்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி குறித்து அமைச்சர் உதயகுமார் கடுமையாக விமர்சித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியையும் கடுமையாக விமர்சித்தார். ஸ்டாலினும் உதயநிதியும் நாவடக்கி பேச வேண்டும், வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி சட்டையை கிழித்து கொண்டிருந்தால் நாங்கள் தகுந்த பதிலடி கொடுப்போம் எனவும், முதல்வருடன் மோதுவதை விட்டுவிட்டு முதலில் உசிலம்பட்டி மற்றும் திருமங்கலத்தில் நின்று எங்களை வெல்லுங்கள் பார்க்கலாம் நீங்கள் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என சவால் விடுத்தார். மேலும் வரும் ஜல்லிக்கட்டு திருவிழாவைக் காண பிரதமர் மோடி வர உள்ளதாக தகவல் வருகிறது எனவும் முதல்வர் அவ்வப்போது அம்மா செய்வதை போலவே நடந்து கொள்கிறார் அதனால் தான் முதல்வர் மீது அம்மாவின் ஆன்மா இறங்கியுள்ளது அதனால் தான் அம்மாவை போலவே ஒவ்வொரு நடவடிக்கைகளையும் செய்து வருகிறார் என பேசினார்.