காங்., முன்னாள் தலைவர் ராகுல் திடீரென பாங்காங் புறப்பட்டு சென்றுள்ளார்.

புதுடில்லி: இரு மாநில தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் திடீரென பாங்காங் புறப்பட்டு சென்றுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு வரும் 21 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநில சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வரும் நேரத்தில் ராகுல் திடீரென பாங்காங்கிற்கு புறப்பட்டு சென்றுள்ளது பலரது புருவங்களை உயர்த்தி உள்ளது. அரியானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் தன்வார் பதவி விலகிய நிலையில் ராகுலால் வளர்க்கப்பட்டவர்கள் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறார்கள் எனவும், காங்கிரஸ் கட்சி தற்போது கடுமையான சவாலை எதிர்கொள்ள உள்ளது. என குற்றம் சாட்டி உள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் தனது ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்காவிட்டால் பிரசாரத்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார். மேலும் கட்சித்தலைமை தொண்டர்களிடம் இருந்து கருத்துக்களை பெற முயற்சிக்கவில்லை என கூறிய அவர் அசோக் தன்வாரை போன்று குற்றம் சாட்டினார். காஷ்மீர்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது, மற்றும் நாடு முழுவதும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகிய இரு முக்கிய பிரச்னைகளை இரு மாநில தேர்தல் நேரத்தில் கையில் எடுத்து எதிர்கட்சிகள் தீவிர பிரசாரத்தை எதிர்கொள்ள உள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது காங்., கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில் முக்கியமான தருணத்தில் பாங்காக் செல்ல ராகுல் எடுத்த முடிவு அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவர் அக்.,10 ம் தேதிக்குள் நாடு திரும்புவார் என கூறப்படுகிறது. கடந்த 2015 ம் ஆண்டில் இதே போன்று ராகுல் 2 மாதங்கள் யாருக்கும் தெரியாமல் வெளி நாடு சென்று இருந்தை விமர்சித்த பா.ஜ., லோக்சபா அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு பதிலாக வெளி நாடுகளில் மகிழ்ச்சியாக இருப்பதாக குற்றம் சாடியது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்