ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் மூலம் மூடப்பட்டது

குழந்தை சுஜித் தவறி விழுந்து உயிரிழந்த 600 அடி ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவையால் மூடப்பட்டது. கடந்த 25-ம் தேதி மாலை 4 மணி அளவில் சுஜித் வில்சனும், அவனது அண்ணன் புனித் ரோஷனும் 4 வயது, அருகில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சோளக்காட்டு வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆழ்துளை கிணறு இருப்பதை அறியாத சுஜித் அதன் மூடி மீது மிதித்து விட்டான். 5 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட மூடி என்பதால் அது உடைந்து சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான். தகவல் அறிந்து ஊர்மக்கள் அங்கு கூடிவிட்டனர். அவர்களே கயிறு கட்டி குழந்தையை எடுத்து விடலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. முதலில் 5 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித் நேரம் ஆக ஆக குழிக்குள் இறங்கி கொண்டே இருந்தான். இதனை தொடர்ந்து 5 நாளாக தமிழக அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து நேற்று இரவு 10.30 மணியளவிலிருந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுகிய வாடை வந்தது. பின்னர் அழுகிய நிலையில் குழந்தை சுஜித்தின் உடல் மீட்டப்பட்டு, பரிசோதனைசெய்யப்பட்டது. பின்னர் ஆவாரம்பட்டி அருகே பாத்திமா புதூர் கல்லறையில் சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த 600 அடி ஆழ்துளை கிணறு மற்றும் சுஜித்தை காப்பற்ற தோண்டப்பட்ட குழியும் கான்கிரீட் கலவைகள் மூலம் மூடப்பட்டது.