சிறுவன் சுஜித் மறைவுக்கு : காயல் அப்பாஸ் ஆழ்ந்த இரங்கல்

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. திருச்சி மாவட்டம் , மணப்பாறை அருகே நடுகாட்டு பட்டியை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து நான்கு நாட்களாக சிறுவனை உயிருடன் மீட்க அரசு தொடர்ந்து போராடி வந்துள்ளது ஆனால் இவ்வளவு போராட்டத்தின் பின் சிறுவன் சுஜித் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது. பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பிடு தொகை வழங்க வேண்டும். அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. சிறுவன் சுஜித்தை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் : தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்தை தொடர்ந்து இனி பயன்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட சம்பந்த பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இது போண்ற துயர சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இது போண்ற துயர சம்பவங்களை தடுக்க குழந்தைகளை பேற்றோர்கள் கவனமாக பாதுகாக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் அன்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்