மின்சாரம் துண்டிக்கப்படுவதை சரி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள்

உதகை அருகே அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதை சரி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். உதகை அருகே உள்ள முள்ளிக்கொரை கிராமத்தில் 500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல நாட்களாக மின்சாரம் அடிக்கடி துண்டிக்கபடுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கபடுகின்றனர். குறிப்பாக ஒரு மாதத்தில் சுமார் 15 நாட்கள் இந்த கிராமத்தில் மின்சாரமின்றி இருளில் மூழ்குவதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் பலனில்லை என்ற அப்பகுதி மக்கள், கிராமத்திற்கு வரும் மின்சாரமானது சாண்டிநல்லா பகுதியிலிருந்து வனப்பகுதியின் இடையே வருவதால் மின் துண்டிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த முள்ளிக்கொரை கிராமத்தில் இருந்து 100ற்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் தொடர் மின்தடையை தடுக்க மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இதே நிலை நீடித்தால் போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)