சசிகலா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி திமுக எம் எல் ஏ மனு!

மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் கைரேகை விவகாரத்தில் சசிகலா, மாவட்ட ஆட்சியர் வீர்ராகவராவ் உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் சிபிஐயிடம் மனு அளித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது, அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் விண்ணப்ப படிவத்தில் உள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கைரேகை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை சுட்டிக்காட்டி, சென்னை சி.பி.ஐ.அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ சரவணன் மனு அளித்தார். அதில், ஜெயலலிதாவின் கைரேகையை அங்கீகரித்த அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவராவ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினார். மேலும், ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த சசிகலா, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அரசு மருத்துவர் பாலாஜி மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்டோர் மீது கிரிமனல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)