ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தBJB எம்.பிக்கு, ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் கற்களை அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி, ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஆஃபர்களை கொட்டிக்கொடுத்து பல ஆயிரம் கோடிகளில் வருமானம் ஈட்டினர். இந்த தீபாவளி விற்பனையில் வழக்கம் போலவே அதிகம் விற்று தீர்ந்தது ஸ்மார்ட் ஃபோன்கள் தான். இந்நிலையில், மேற்கு வங்கமாநிலத்தில் மல்டா நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காகென் முர்மு, மற்ற அனைவரையும் போலவே தீபாவளிக்கு ஒருவாரத்திற்கு முன்பு சாம்சங் ஃபோனை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்துவிட்டு செல்ஃபோனுக்காக காத்திருந்த முர்முவிற்கு செஃல்போன் வந்துசேரவில்லை. தீபாவளி நாளன்று முர்மு வெளியில் சென்றிருந்த நிலையில், அவர் ஆர்டர் செய்த செல்ஃபோனை அவர் மனைவியிடம் கொடுத்துவிட்டு, செல்ஃபோனுக்கான தொகையான 11,999 ரூபாயை வாங்கிக்கொண்டு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தினர் சென்றுவிட்டனர். மறுநாள் வீடு திரும்பிய முர்மு, தீபாவளியன்று வந்து சேர்ந்த செல்ஃபோன் பெட்டியை வாங்கி ஆர்வமுடன் பிரித்தார். பிரித்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், செல்போன் பெட்டி ஏற்கனவே பிரிக்கப்பட்டிருந்தது. அதோடு, சாம்சங் ஃபோன் ஆர்டர் செய்தவருக்கு ரெட்மி 5ஏ செல்போன் வந்திருந்தது. அதிர்ச்சியுடன் செல்போன் பெட்டியை திறந்து பார்த்தவருக்கு, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எம்பி முர்முவுக்கு சாம்சங் செல்ஃபோனுக்கு பதில் தீபாவளி பரிசாக இரண்டு மார்பிள் கற்களை அனுப்பி வைத்திருந்தது ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொதித்தெழுந்த முர்மு, மால்டாவில் உள்ள இங்க்லீஷ் பஜார் காவல்நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மால்டா காவல்துறையின் தலைமை அதிகாரி அலோக் ரஜோரியா “எம்பி முர்முவின் புகார் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து பேசிய எம்.பி முர்மு, “நான் ஆன்லைனில் இதற்கு முன்பு எதையுமே வாங்கியதில்லை. எனது மகன் தான் இந்த முறை ஆர்டர் செய்தான். நான் ஆன்லைனில் பொருள் வாங்குவது இதுவே முதல்முறை; நுகர்வோர் நலத்துறை அமைச்சரிடம் இது குறித்து நிச்சயம் புகார் அளிப்பேன்” என்று தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)