முதல்வர்களாக பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை பார்ப்பதற்கு அவர்களின் தேசிய மாநாட்டு கட்சியினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு : கடந்த 2 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர்களாக பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை பார்ப்பதற்கு அவர்களின் தேசிய மாநாட்டு கட்சியினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வழிவகை செய்யும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை ஆக., 5 ம் தேதி மத்திய அரசு நீக்கியது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரிவினைவாத இயக்க தலைவர்கள் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தற்போது காஷ்மீரில் நிலைமை சீரானதை அடுத்து, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்திக் கொள்ளப்பட்டது. கடந்த 2 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்களும், முன்னாள் முதல்வர்களுமான உமர், பரூக் அப்துல்லாவை சந்திக்க கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் நிர்வாகி தேவேந்தர் சிங் ராணா தலைமையிலான 15 பேர் கொண்ட குழு இன்று (அக்.,06) காலை உமர் மற்றும் பரூக் அப்துல்லாவை சந்தித்து பேசுகின்றனர். இந்த தகவலை கட்சியின் செய்தி தொடர்பாளர் மதன் மந்தூ தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்