ஆழ்துளைக் கிணறுகளால் நிகழ்ந்த விபத்துகள் குறித்தும், அவர்கள் காப்பாற்றப்பட்ட விவரங்கள் குறித்தும் விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு காலக்கட்டங்களில் ஆழ்துளைக் கிணறுகளால் நிகழ்ந்த விபத்துகள் குறித்தும், அவர்கள் காப்பாற்றப்பட்ட விவரங்கள் குறித்தும் விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு... தமிழகத்தில் முதன்முறையாக 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி ஆண்டிப்பட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் மாயி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினரின் 30 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு சிறுவன் மீட்கப்பட்டான். இருந்தும் சிறுவன் உயிரிழந்தது தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அத்துடன் முடிவடையாமல் அதே ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பின்னர் சடலமாக மீட்க்கப்பட்டான். ஒரே ஆண்டில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 2 குழந்தைகள் இறந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்த விபத்து அத்தோடு முடிவடையாமல், மீண்டும் தொடர்ந்தது. 2011 செப்டம்பர் 8ஆம் தேதி நெல்லை மாவட்டம், கைலாசநாதபுரத்தைச் சேர்ந்த சிறுவன் தர்ஷன் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். இதேபோல், 2012ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே ஆழ்துளைக் கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் குணா, எதிர்பாராத விதமாக 50 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். ஆனால் இம்முறை உயிரிழப்பு ஏதும் ஏற்படாத வகையில் குழந்தையை மீட்க வேண்டும் என்ற சீரிய எண்ணத்தில் செயல்பட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் சிறுவன் குணாவை உயிருடன் மீட்டனர். சிறுவன் உயிருடன் மீட்க்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து 2013 ஏப்ரல் 28ஆம் தேதி கரூர் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் மீட்கப்பட்டு சிறிது நேரத்திலேயே சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இந்தத் துக்கத்திலிருந்தே மக்கள் மீளாதிருந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள புலவன்பாடியில் 4 வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தாள். கிணற்றில் விழுந்த சிறுமி 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பயனளிக்காததால் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், விழுப்புரம் அருகேயுள்ள பல்லகச்சேரி கிராமத்தில் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி மதுமிதா என்ற பெண் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார். பல மணிநேரப் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட மதுமிதாவிற்கு தீவிரச் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பயனளிக்காததால் மறுநாள் மதுமிதா உயிரிழந்தார். இந்த சோகம் நடந்து முடிந்த ஒரு 9 நாட்களிலேயே மீண்டும் இதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறியது. நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். பின்னர், துரிதமாகச் செயல்பட்ட மீட்பு படையினர் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவனை உயிருடன் மீட்டனர். உயிருடன் சிறுவன் மீட்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஒவ்வொரு முறையும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அடுத்த சில மாதங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், 2015 ஏப்ரல் 13ஆம் தேதி வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளைக் கிணற்றில் இரண்டரை வயது குழந்தை விழுந்தான். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனையடுத்து, 2018ஆம் ஆண்டு நாகை அருகேயுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டான். இதேபோல், தற்போது திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் தொடர்ந்துள்ளது. அவரை மீட்பதற்காகத் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)