பள்ளி மாணவ, மாணவிகள் சுஜித் வில்சனுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டு பட்டியை சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ், கலாமேரி தம்பதியினரின் இரண்டாவது மகன் 2 வயது சுஜித் வில்சன் விளையாட சென்றபோது திறந்த நிலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தவரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உயிரிழந்த நிலையில் மீட்டனர் . உயிரிழந்த சுஜித் வில்சனுக்கு திருச்சி புத்தூர் ஆல் செயின்ஸ் உயர்நிலைப்பள்ளி பள்ளி, மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பராமரிப்பின்றி திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணற்றை மூடாமல் இருந்தால் அக்கிணற்றை மூட அறிவுறுத்துவோம் என உறுதிமொழி ஏற்றார்கள்.பள்ளித் தலைமை ஆசிரியர் ஆல்பர்ட்தாஸ், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விஜயகுமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.