கோர்ட் விதித்த வழிமுறைகள் என்ன?

சென்னை: கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில், குழந்தைகள் விழுந்து இறக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில், 10 ஆண்டுகளுக்கு முன் சுப்ரீம் கோர்ட் , அது குறித்து, தாமாக முன்வந்து விசாரணை நடத்தி சில உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகள் இன்னும் பேப்பர்களில் தான் உள்ளன. இதற்கு பின்னர், பல குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தனர். கடைசியாக மணப்பாறையை சேர்ந்த சுஜித் இறந்துள்ளார்.கடந்த 2019ம் ஆண்டில், ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு கடிதம் ஒன்று வந்தது. இந்த கடிதத்தை ஏற்று கொண்டு அவர், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார்.2010 பிப்.,11 அன்று, தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சவுகான், பிரசாத் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி சில வழிமுறைகளை வகுத்தது, அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுகள் அனைத்து மாநில தலைமை செயலர்கள் மூலம் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீதிபதி பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற பின்னர், தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற கபாடியா, நீதிபதிகள் ராதாகிஷ்ணன், சுவதந்தர் குமார் அமர்வு, 2010 ஆக., மாதத்தில், இந்த உத்தரவில் சில மாற்றங்களை செய்தனர். இதன்படி, * ஆழ்துளை கிணறு அமைக்கும், 15 நாட்களுக்கு முன் நில உரிமையாளர்கள், கலெக்டர் அல்லது மாநகராட்சி அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் . * போர்வெல் அமைக்கும் நிறுவனங்கள், அரசு துறைகளிடம் பதிவு செய்து அனுமதி வாங்கியிருக்க வேண்டும். * ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்தில், நில உரிமையாளர்கள் மற்றும் ஆழ்துளை அமைக்கும் நிறுவனத்தின் தகவல்கள் அடங்கிய பலகை வைக்க வேண்டும் * ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்தை சுற்றி வேலிகள் அல்லது தடுப்புகள் அமைப்பது கட்டாயம். * ஆழ்துதுளை கிணறை சுற்றி 0.3 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்பட வேண்டும். *கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள், களிமண், மணல், ஜல்லிகற்கள், கூழாங்கற்களை கொண்டு மூடப்பட்பட வேண்டும். *மேற்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். அரசு அமைப்புகள் மூலம், ஆழ்துளை கிணறுகளை கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் * ஒவ்வொரு பகுதியில் உள்ள போர்வெல்கள் மற்றும் கைவிடப்பட்ட ஆழ்துளைகள் நிலை குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை அரசு அலுவலகங்களில் பராமரிக்க வேண்டும். மாவட்டம், கிராமம், வாரியாக தோண்டப்பட்ட ஆழ்துளைகள், பயன்பாட்டில் உள்ளவை, கைவிடப்பட்டவை, குறித்த தகவல்களும் பராமரிக்க வேண்டும். * கிராமப்புறங்களில், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் மூலம், கண்காணிக்க வேண்டும். நகர் பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டத்துறையின் இளநிலை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் மூலம் கண்காணிக்க வேண்டும். பயன்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டது குறித்து அவர்கள் தான் சான்று அளிக்க வேண்டும். *அரசு அதிகாரிகள் தங்களது அதிகாரத்திற்கு உட்பட்டு, கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை, தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இது குறித்து தகவல்களை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் முறையாக பராமரிக்க வேண்டும் . இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு