டாஸ்மார்க் பார்களில் முளைத்த தாமரை! சபாஷ் பா.ஜ.க

தமிழகத்தில் பா.ஜ.க.வினர் மட்டும் இத்தனை நாட்களும் தேசப் பற்றாளர்கள் போன்று வேடமிட்டு வந்தார்கள். அவர்களின் வேஷமும் இப்போ கலைஞ்சு போச்சு.ஆம், தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் பார் எடுப்பதில் அ.தி.மு.க.வின் ஆதரவுடன் சில பா.ஜ.க. பிரமுகர்கள் புகுந்து விளையாடி விட்டார்கள்.கட்சிக்கு செலவழிக்க காசு வேணும், அதுக்கு பார் எடுப்பது தவறு இல்லை என்று பா.ஜ.க.வினரும் பேசத் தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் தற்போது வழங்கப்பட்டு வருவது தெரிந்ததுமே அ.தி.மு.க. மேலிடத்தை அணுகியிருக்கிறார்கள். உடனே பெருந்தன்மையாக புறநகர் பகுதிகளில் பா.ஜ.க.வினருக்கு ஒதுக்குவதாக அ.தி.மு.க. ஒப்புக்கொண்டதாம்.இதையடுத்து சென்னையை ஒட்டிய புறநகர் பகுதி முழுவதும் பா.ஜ.க... வசம் வந்துவிட்டதாம். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த நிலை தொடரும் என்கிறார்கள். அப்பாடி, இனிமேல் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் போராட மாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம். ஆளும் கட்சியினர் என்பதால் எத்தனை நேரமும் பார் திறந்திருக்கும், மக்களுக்கு சேவையும் கிடைக்கும். நல்லா இருங்க மக்களே.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)