மதுரை மணிகண்டன்ஆதங்க பேட்டி ஏன் தோல்வி அடைந்தது

மதுரை : சுஜீத்... மீண்டு வா... என தீபாவளியை மறந்து ஒட்டுமொத்த தமிழகமே ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருந்தது. ஆழ்குழியில் விழுந்தவனை காப்பாற்ற எத்தனையோ முயற்சிகள் எடுத்தும்எல்லாம் வீணாகி போனது. கண்ணீர் சிந்தாத மக்கள் இல்லை. ஏன் அந்த வானம் கூட மீட்பு பணியின்போது கண்ணீர் சிந்த மறக்கவில்லை. சுஜீத்தை மீட்க பல முயற்சிகள் நடந்தன. அதில் ஒன்றுதான் ரோபோட்டிக்இயந்திரம் மூலம்துாக்குவது. இதை வடிவமைத்தவர் மதுரை மணிகண்டன் 44. ஏற்கனவே சங்கரன்கோவிலில் ஆழ்குழாயில் சிக்கிய குழந்தையை இந்த கருவி மூலம் மீட்டு தமிழகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர். ஆனால் நடுகாட்டுப்பட்டியில் சுஜீத்தை மீட்கும் இவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏன்... எதனால்?மணிகண்டன் அளித்த சிறப்பு பேட்டி: மீட்பு பணியில் ஈடுபட எப்போது அழைப்புவந்தது? அக்.,25 மாலை 6:15 மணி இருக்கும். அலைபேசியில் திருச்சி கலெக்டர் விபரத்தை கூறினார். மதுரையில் உள்ள தென்மண்டல தீயணைப்பு இணை இயக்குனர் கார் என் வீட்டிற்கு வந்தது. கார் மூலம் 100 கி.மீ., வேகத்தில் சென்று, இரவு 8:00 மணிக்கு நடுகாட்டுப்பட்டியை அடைந்தேன். சுஜீத்தை மீட்கும் முயற்சியின்போது நடந்தது என்ன? ஆழ்குழாயின் சுற்றளவுநாலரை இன்ச் ஆகஇருந்தது. ஆனால் நான் வடிவமைத்த ரோபோட்டிக் இயந்திரம் சுற்றளவு 8 இன்ச். இதனால் ஆழ்குழாயில் இயந்திரத்தை செலுத்துவது சிரமமாக இருந்தது. பிறகு எப்படி இயந்திரம் உள்ளே சென்றது? இரவு மணப்பாறையில் உள்ள லேத் பட்டறைக்கு சென்று 8 இன்ச் அளவை நாலரை இன்ச் அளவிற்கு குறைத்து அதிகாலை 3:00 மணிக்கு எடுத்து வந்தேன். அதற்குள் மாநில, தேசிய பேரிடர் மேலாண்மை வீரர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களுடன் நானும் என்னால் ஆன முயற்சியை மேற்கொண்டேன். ஏன் சுஜீத்தை துாக்க முடியவில்லை? குழியில் சிறிதுகூட இடைவெளி இல்லாததுசவாலாக இருந்தது. ரோபோட்டிக் இயந்திரத்தால் சுஜீத் தலையை பிடிக்க முடியவில்லை. அதற்குள் படிப்படியாக குழந்தை கீழே சென்றுவிட்டது. சுஜீத்தை மீட்கும் வரை அங்குதான் இருந்தீர்களா? ஆமாம். மாநில, தேசிய பேரிடர் மேலாண்மை வீரர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டேன். எனது ரோபோட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தி மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். ரோபோட்டிக் இயந்திரம் 8 இன்ச் அளவில்தான் இருக்க வேண்டுமா? இதுவரை நான் மேற்கொண்ட மீட்பு பணிகளில் ஆழ்குழாய் சுற்றளவு கொஞ்சம் பெரியதாக இருந்தது. அதன் அடிப்படையில்தான் ரோபோட்டிக் இயந்திரத்தை உருவாக்கினேன்.வருங்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. மீறி நடக்கும்பட்சத்தில் மீட்பதற்காக பல அளவுகளில் ரோபோட்டிக் இயந்திரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்